Home தமிழகம் "5 மணி நேரத்தில் ரூ.5 கோடி" சந்தையில் கல்லாக் கட்டிய ஆடு விற்பனை!

“5 மணி நேரத்தில் ரூ.5 கோடி” சந்தையில் கல்லாக் கட்டிய ஆடு விற்பனை!

வேப்பூர் அருகே நடைபெற்ற சந்தையில் 5 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது அங்கு பராமரிப்பு பணி நடைபெறுவதால், தற்காலிகமாக ஆட்டுச் சந்தை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தையில் வேப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை 4 மணிக்கே சந்தை தொடங்கப்பட்டது. சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு உள்ளிட்ட பல வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதனை வாங்க சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, நாகை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் சந்தையில் குவிந்தனர்.

பண்டிகை காலம் என்பதால் ஒரு ஆட்டின் விலை ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ.7,000 முதல் 20,000 வரையில் விற்பனை செய்யப்பட்டது. சந்தை தொடங்கியதில் இருந்து காலை 8 மணிக்கு உள்ளாகவே சுமார் 7500 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், அதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்றும் கூறினர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘தொடர்ந்து 3ஆவது முறையாக’ கொளத்தூரில் களமிறங்கும் மு.க ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கட்சிகளும் விருப்ப மனு விநியோகிக்க தொடங்கி விட்டன. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான...

“உன்னோடு உறவாடிய போட்டோவ ஊருக்கே போட்டு காட்டுவேன்” -காதலன் மிரட்டலால் காதலி செஞ்ச வேலை

அந்தரங்க போட்டோக்களை சமூக ஊடகத்தில் பரப்புவதாக காதலன் மிரட்டியதால் ஒரு காதலி தற்கொலை செய்து கொண்டார் . உத்தரபிரதேச மாநிலம்...

பீ கேர்புல்… குண்டுமழையோடு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்!

அமெரிக்கர்களைக் குறிவைத்து ஈரானைச் சேர்ந்த ஷியா போராளிக் குழுக்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதலை நிகழ்த்திவருகின்றன. இம்மாதத்தில் கூட ஈராக்கின் தன்னாட்சி பிரதேசமான குர்திசில் உள்ள இர்பில் நகரத்திற்கு அருகே ஈரானிய...

காதலன் இறந்த சோகத்தில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

சென்னை ஆவடி அருகே காதலன் உயிரிழந்த வேதனையில், ஆந்தராவை சேர்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர்...
TopTamilNews