“ஆடு மாஸ்க் போடல ,மட்டன் பிரியாணி போட்டுடலாமா?”-முகக்கவசம் அணியாத ஆட்டை அரெஸ்ட் செய்த போலீஸ்..

“ஆடு மாஸ்க் போடல ,மட்டன் பிரியாணி போட்டுடலாமா?”-முகக்கவசம் அணியாத ஆட்டை அரெஸ்ட் செய்த போலீஸ்..

ஆட்டுக்கு முகமூடி போடச்சொல்லி போலீசார் ஆட்டை கைது செய்து, காவல் நிலையத்திற்கு தூக்கிச்சென்ற வினோதமான சம்பவம் அந்த பகுதியில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கான்பூர் பெக்கோஞ்சஞ்ச் பகுதியில் ஒரு ஆடும் ,ஆடு மேய்ப்பவரும் மாஸ்க் அணியாமல் சுற்றிக்கொண்டிருந்தனர் .அப்போது அந்த வழியாக ஒரு போலீஸ் ஜீப் வந்தது .போலீஸ் ஜீப்பை கண்ட ஆடு மேய்ப்பவர் ஆட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டார் .அப்போது ஜீப்பில் வந்த போலீசார் ஆட்டுக்காரரை தேடி பார்த்தனர் .அவர் அங்கு இல்லாததால் ,போலீசார் அங்கு தனியே மாஸ்க் போடாமல் சுற்றிக்கொண்டிருந்த ஆட்டை தூக்கிக்கொண்டு போய்விட்டனர் .

“ஆடு மாஸ்க் போடல ,மட்டன் பிரியாணி போட்டுடலாமா?”-முகக்கவசம் அணியாத ஆட்டை அரெஸ்ட் செய்த போலீஸ்..
பிறகு போலீசார் போனதும் அங்கு ஓடிவந்த ஆட்டுக்காரர் ,ஆட்டை காணாமல் திண்டாடினார் .உடனே போலீஸ் ஆட்டை தூக்கிக்கொண்டு போனதை அறிந்த அவர் ,ஆட்டை தேடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார் .அங்கு அவரை பார்த்த காவல்துறையினர் ,ஏன் ஆட்டுக்கும் ,உனக்கும் ,மாஸ்க் போடவில்லை என்று கேட்டனர் .இன்னும் கொஞ்சநேரம் நீ லேட்டா வந்திருந்தால் மாஸ்க் போடாத ஆட்டை மட்டன் பிரியாணி போட்டிருப்போம் என்று சொல்லி ,இனி மாஸ்க் உனக்கும் ,ஆட்டுக்கும் அவசியம் போடவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர் .
ஆடு கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஆட்டுக்காரர் உடனே ஒரு மாஸ்க்கை வாங்கி போட்டுக்கொண்டார் .

“ஆடு மாஸ்க் போடல ,மட்டன் பிரியாணி போட்டுடலாமா?”-முகக்கவசம் அணியாத ஆட்டை அரெஸ்ட் செய்த போலீஸ்..
FIR (Photo: IANS)

இந்த சம்பவம் சமூக ஊடகங்களால் கேலியும் ,கிண்டலும் செய்யப்பட்டதால் போலீசார் ஆட்டை உடனே விடுவித்ததாக கூறப்பட்டது .இன்னும் சிலரோ நாய்க்கு மாஸ்க் போட சொல்லி கட்டாயப்படுத்தும்போது ,ஆட்டுக்கு ஏன் போடக்கூடாது என்று ஊடகத்தில் கருத்து தெரிவித்தனர் .