அதிகரித்து வரும் கொரோனா பலி… கோவாவில் இன்று சட்டப்பேரவை கூட்டம்… பா.ஜ.க. அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

அதிகரித்து வரும் கொரோனா பலி… கோவாவில் இன்று சட்டப்பேரவை கூட்டம்… பா.ஜ.க. அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவன் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்காக கோவா அரசு ஜூலை 27ம் தேதியன்று (இன்று) சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவு எடுத்துள்ளது. சட்டப்பேரவையை கூட்டும் அரசின் முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவா சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் திகம்பர் காமத் இது தொடர்பாக டிவிட்டர் பதிவில்,

அதிகரித்து வரும் கொரோனா பலி… கோவாவில் இன்று சட்டப்பேரவை கூட்டம்… பா.ஜ.க. அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

கொரோனா வைரசால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, 14 வயது சிறுவன் தனது வாழ்க்கையை இழந்த நிலையில், பா.ஜ.க. அரசு இன்னும் அனைத்து விதிகளையும் ரத்து செய்து ஒரு நாள் சட்டசபை கூட்டத்தின்போது பட்ஜெட்டை நிறைவேற்றி, விவாதமின்றி அவையை நடத்துவதா? கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் மக்களின் துன்பம் ஆகியவை அரசுக்கு கடைசி முன்னுரிமையா என்பதை முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் திட்டவட்டமான அறிக்கையை வெளியிடுவாரா? என பதிவு செய்து இருந்தார்.

அதிகரித்து வரும் கொரோனா பலி… கோவாவில் இன்று சட்டப்பேரவை கூட்டம்… பா.ஜ.க. அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கோவாவில் இதுவரை (நேற்று வரை) கொரோனா வைரஸால் மொத்தம் 4,540 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,865 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,646 பேர் தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 29 பேர் உயிர் இழந்துள்ளனர்.