இளைஞர்களை ஊக்குவிக்க சொந்த காசில் மரடோனா சிலை நிறுவுவேன்… கோவா அமைச்சர் தகவல்

இளைஞர்களை ஊக்குவிக்க சொந்த காசில் மரடோனா சிலை நிறுவுவேன்… கோவா அமைச்சர் தகவல்

கோவாவில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்த பணத்தில் மரடோனாவின் சிலையை நிறுவுவேன் என்று அம்மாநில அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பெரும் புகழ் பெற்ற கால்பந்து ஜாம்பன்வான்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனுமான மரடோனா நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு சர்வதேச கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் அனைத்து தரப்பு மக்களும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

இளைஞர்களை ஊக்குவிக்க சொந்த காசில் மரடோனா சிலை நிறுவுவேன்… கோவா அமைச்சர் தகவல்
மிக்கேல் லோபோ

கோவாவின் அறிவியல், தொழில்நுட்ப துறை அமைச்சர் மிக்கேல் லோபோ கூறுகையில், கோவா இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக கோவா அரசு அல்ல, நான் டியாகோ மரடோனாவின் முழு உருவ சிலையை வடக்கு மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் நிறுவுவேன் என்று தெரிவித்தார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை ஊக்குவிக்க சொந்த காசில் மரடோனா சிலை நிறுவுவேன்… கோவா அமைச்சர் தகவல்
பிரமோத் சாவந்த்

முதல்வர் பிரமோத் சாவந்த் டிவிட்டரில், கனத்த இதயத்துடன், நான் கால்பந்து சமூகத்துடன் அனுதாபம் கொள்கிறேன். டியாகோ மரடோனா, கால்பந்து ஐகான் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். கோவாவின் பல கால்பந்து காதலர்களின் உற்சாகத்துக்கும், மாநிலத்தில் கால்பந்து கலாச்சாரத்தை ஊக்குவித்தற்கும் மரடோனா காரணமாக இருந்தார் என்று பதிவு செய்து இருந்தார்.