Home இந்தியா "காதலனை மறந்துடு ,இல்லேன்னா இறந்துடு" -கிரிக்கெட் ஸ்டம்பால் மகளை தாக்கிய தந்தை .

“காதலனை மறந்துடு ,இல்லேன்னா இறந்துடு” -கிரிக்கெட் ஸ்டம்பால் மகளை தாக்கிய தந்தை .


தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்த தன்னுடைய மகளை ஒரு தந்தை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

"காதலனை மறந்துடு ,இல்லேன்னா இறந்துடு" -கிரிக்கெட் ஸ்டம்பால் மகளை தாக்கிய தந்தை .
Image

கோவாவில் வசிக்கும் 46 வயதான தொழிலதிபர் சுனில்குமார் ராஜன் என்பவர் அங்கு பல தொழில்கள் செய்து வருகிறார் .அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளது . அவருக்கு ஒரே ஒரு மகளிருக்கிறார் .கல்லூரியில் படித்து வரும் அந்த 20 வயது மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார் .இதனால் அந்த காதலரும் அவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்
அதனால் முதலில் அந்த பெண் தன்னுடைய தந்தையிடம் தன்னுடைய காதலை பற்றி கூறி,அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார் .ஆனால் அந்த தந்தை அவரின் காதலனை பற்றி விசாரித்த போது அவர் எந்த வேலையுமில்லாமலும் வேறு சாதியை சேர்ந்தவராக இருந்ததாலும் அவர் அந்த காதலனை அவருக்கு கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் தரவில்லை .
இதனால் அந்த பெண்ணுக்கும் ,அந்த தந்தைக்கும் தினமும் சண்டை வந்துகொண்டிருந்தது .கடந்த வியாழக்கிழமை அந்த மகள் அவரின் அப்பாவிடம் மீண்டும் தன்னுடைய காதலனோடு சேர்த்து வைக்குமாறு கடுமையாக சண்டை போட்டுள்ளார் .அப்போது இருவருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அந்த தந்தை அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டம்ப் கொண்டு அந்த மகளின் தலையில் தாக்கியுள்ளார் .

This picture has been used for representational purpose only

இதனால் கடுமையாக காயமுற்று ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த பெண்ணை, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் அந்த பெண் இறந்தார் .இதனால போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .

"காதலனை மறந்துடு ,இல்லேன்னா இறந்துடு" -கிரிக்கெட் ஸ்டம்பால் மகளை தாக்கிய தந்தை .
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கடுமையாக்கப்படுமா கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வார...

தமிழைக் கட்டாய அர்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம் இயற்ற வேண்டும் – தெய்வத் தமிழ்ப் பேரவை -செயற்குழு கூட்ட தீர்மானம்

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், இன்று காலை - குடந்தை வட்டம் - திருவேரகம் (சாமிமலை) - சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு, இறைநெறி இமயவன் தலைமை...
- Advertisment -
TopTamilNews