’நேற்றும் கோவாவுக்கு வெற்றி கிடைக்கல’ – ISL கால்பந்து திருவிழா

 

’நேற்றும் கோவாவுக்கு வெற்றி கிடைக்கல’ – ISL கால்பந்து திருவிழா

ISL கால்பந்து திருவிழாவில் ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கின்றன.

நேற்றைய போட்டியில் கோவா Vs Northeast united அணிகள் மோதிக்கொண்டன. இதில் Northeast united அணிக்கு அது மூன்றாவது போட்டி. இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று ஒன்றில் சமநிலையில் என்றிருக்க, பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

’நேற்றும் கோவாவுக்கு வெற்றி கிடைக்கல’ – ISL கால்பந்து திருவிழா

கோவா அணியைப் பொறுத்தவரை இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்று பாயிண்ட் டேபிளில் 10-வது இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி என்பது Northeast united அணியை விடவும் கோவாக்கு முக்கியம். அப்போதுதான் பாயிண்ட் டேபிளில் சற்றாவது முன்னேற முடியும்.

நேற்றைய போட்டியின் 40 நிமிடத்தில் Northeast united அணியில் சார்பாக ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பதிலடியாக, அடுத்த சில நிமிடங்களில் கோவா அணியும் ஒரு கோல் போட்டது.

’நேற்றும் கோவாவுக்கு வெற்றி கிடைக்கல’ – ISL கால்பந்து திருவிழா

இரு அணிகளும் தலா ஒரு கோல் எனும் சமநிலையில் அடுத்த கோல் யார் போடுவார்கள். எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், ஆட்ட நேர இறுதிவரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. எனவே போட்டி சமனில் முடிவடைந்தது. கோவா அணி இதுவரை மூன்று போட்டிகள் ஆடி, ஒன்றில் தோற்று, இரண்டில் டை ஆக்கியுள்ளது. அதனால், இந்தச் சீனனில் கோவா அணிக்கு முதல் வெற்றி இன்னும் வசமாக வில்லை. ஆயினும் பாயிண்ட் பட்டியலில் 10 இடத்திலிருந்து 7-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.