அப்பாவி வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்.. மத்திய, மாநில பா.ஜக. அரசுகளை இனி நம்ப முடியாது.. கோவா காங்கிரஸ்

அப்பாவி வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்.. மத்திய, மாநில பா.ஜக. அரசுகளை இனி நம்ப முடியாது.. கோவா காங்கிரஸ்

மத்திய மற்றும் மாநில பா.ஜ.க. அரசுகளை இனி நம்ப முடியாது என கோவா காங்கிரசின் மூத்த தலைவர் திகம்பர் காமத் தெரிவித்தார்.

கோவா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திகம்பர் காமத் கூறியதாவது: போதும், போதும் இனி அப்பாவி வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். எந்தவொரு மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை உருவாக்காமல் ஆண்டு முழுவதும் கொண்டாட்ட மனநிலையில் இருந்த மத்திய மற்றும் மாநில பா.ஜ.க. அரசுகளை நாங்கள் இனி நம்ப முடியாது.

அப்பாவி வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்.. மத்திய, மாநில பா.ஜக. அரசுகளை இனி நம்ப முடியாது.. கோவா காங்கிரஸ்
திகம்பர் காமத்

கோவிட் நிர்வாகத்தை கையாள ஒரு பணிக்குழு அமைக்கப்பட வேண்டிய சரியான நேரம். நாம் இப்போதிருந்து ஒரு மாதம் முன்னதாகவே பார்க்க வேண்டும். பருவமழை தொடங்கியதும் விஷயங்கள் மிகவும் சவாலானதாகி விடும். கோவிட் நிர்வாகத்தை பாதிக்கும். மின்சாரம் துண்டிப்பு, சாலைகள் முடக்கம் வெள்ளப்பெருக்கு ஆகியவை கோவிட் நிர்வாகத்தை பாதிக்கும். இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்.. மத்திய, மாநில பா.ஜக. அரசுகளை இனி நம்ப முடியாது.. கோவா காங்கிரஸ்
பா.ஜ.க.

போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகள் வாங்கப்படுவது முக்கியம். ஜூலை நடுப்பகுதிக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும். எனது ஆலோசனையை பா.ஜ.க. அரசு தீவிரமாக சிந்திக்கும் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பணிக்குழுவை உருவாக்க நான் செய்த பரிந்துரையை பிரதமர் அலுவலகமோ அல்லது கோவா முதல்வரோ கவனிக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கோவிட் கையாளுதல் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே இராணுவத்துடன் கலந்தோலோசிக்கத் தொடங்கியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.