கோவாவை பற்றி பேசுவதற்கு முன்பு உங்க பகுதியை பற்றி கவலைப்படுங்க.. கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த பிரமோத்

 

கோவாவை பற்றி பேசுவதற்கு முன்பு உங்க பகுதியை பற்றி கவலைப்படுங்க.. கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த பிரமோத்

காற்று மாசுபாடு தொடர்பாக கோவாவை பற்றி பேசுவதற்கு மன் உங்க பகுதியை பற்றி கவலைப்படுங்க என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பதிலடி கொடுத்தார்.

கோவாவில் நிலக்கரி துறையில் அரசின் 3 திட்டங்களுக்கு எதிராக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தின. அந்த திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கோவாவில் நிலக்கரி கையாளும் திறனை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்தும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.

கோவாவை பற்றி பேசுவதற்கு முன்பு உங்க பகுதியை பற்றி கவலைப்படுங்க.. கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த பிரமோத்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுற்றுசூழலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட கோவா மக்களை பாராட்டினார். மேலும் பொது மக்களின் போராட்டத்தை கோவா பா.ஜ.க. அரசு அடக்குவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமையன்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், நான் டெல்லியில் இருந்தேன், இன்றுதான் இங்கு வந்தேன். (டெல்லியில்) காற்றின் தரம் எவ்வளவு மோசமானது என்று பார்த்தேன். அவர் கோவாவை பற்றி பேசுவதற்கு முன்பு தனது சொந்த பகுதியை பற்றி கவலைப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கோவாவை பற்றி பேசுவதற்கு முன்பு உங்க பகுதியை பற்றி கவலைப்படுங்க.. கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த பிரமோத்
காற்று மாசு

சரி இதோடு பிரச்சினை முடிந்தது என்று பார்த்தால், மீண்டும் கெஜ்ரிவால் டிவிட்டரில், இது டெல்லி மாசுபாடு vs கோவா மாசுபாடு பற்றி அல்ல. டெல்லி மற்றும் கோவா இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை. நாம் அனைவரும் ஒரே நாடு. டெல்லி மற்றும் கோவா இரண்டிலும் மாசு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் டிவிட்டரில், எனது அரசு கோவாவில் மாசு பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்கிறது. மேலும் கோவா மாசு இல்லாததாக இருப்பதை அது உறுதி செய்யும். டெல்லி மக்களும் தங்கள் அழகான மாநிலத்தில் இதை விரும்புகிறார்கள் என்று நாம் நம்புகிறேன் என பதிவு செய்து இருந்தார்.