சீன பொருட்களை புறக்கணித்தால் ரூ.1.29 லட்சம் கோடி அளவுக்கு சீனாவுக்கு பாதிப்பு ஏற்படும்…. வர்த்தக அமைப்பு தகவல்

கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்திய-சீன வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து நம் நாட்டில் சீனாவுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருகிறது. மேலும், மக்களும் சரி, வர்த்தகர்களும் சரி சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். இதுதவிர சீனாவுக்கு பொருளாதார ரீதியில் அடி கொடுக்கும் நோக்கில், 4ஜி நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காக வழங்கும் டெண்டரில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன தயாரிப்புகள்

இந்நிலையில் சீன பொருட்களை புறக்கணித்தால் சீனாவின் ஏற்றுமதியில் ரூ.1.29 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என தேசிய வர்த்தக அமைப்பான அனைத்து இந்திய வியாபர் மண்டல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வர்த்தக அமைப்பு கூறுகையில், சீனாவிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ.5.62 லட்சம் கோடிக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ரூ.1.29 லட்சம் கோடி அளவுக்கு பொம்மைகள், செல்போன்கள், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சரக்குள், அழகு சாதன பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கு மாற்றாக இந்திய தயாரிப்புகளை கொண்டு வரலாம் என தெரிவித்தது.

சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு, இந்திய தயாரிப்புகளுக்கு ஆதரவு

அனைத்து இந்திய வியாபர் மண்ட கூட்டமைப்பின் பொது செயலாளர் வி.கே. பன்சால் இது தொடர்பாக கூறுகையில், சீன கையிருப்புகளை காலி செய்யவும், சீன பொருட்களை வாங்க புதிதாக ஆர்டர் செய்வதையும் தவிர்க்கும்படி எங்களது கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களை வலியுறுத்துகிறோம். சீன பொருட்களை விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்குமாறு அரசாங்கததில் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேற்கு வங்க வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சுஷில் போடார் கூறுகையில், முடிந்த அளவு சீன பொருட்களில் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு எங்கள் உறுப்பினர்களிடம் வலியுறுத்திள்ளோம் என தெரிவித்தார்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...