‘கொரோனாவால் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை’.. கைது செய்ய தடை நீட்டிப்பு!

 

‘கொரோனாவால் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை’.. கைது செய்ய தடை நீட்டிப்பு!

ராமநாதபுரத்தை சேர்ந்த துளசி மணிகண்டன் என்பவரிடம் நீதிமணி மற்றும் ஆனந்தன் ஆகிய 2 பேரும் பணம் வாங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். தன்னிடம் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்ததாக, துளசி மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஞானவேல்ராஜாவை ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

‘கொரோனாவால் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை’.. கைது செய்ய தடை நீட்டிப்பு!

மேலும், கைது செய்வதை தடுக்கும் விதமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனு விசாரணையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொரோனா உறுதியானதால் ஞானவேல்ராஜா ஆஜராக இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதித்த இடைக்காலத்தடையை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.