• April
    03
    Friday

Main Area

Main



தளபதி 63 படத்தில் இணைந்த பட்டிமன்ற பேச்சாளர்!

தளபதி 63
தளபதி 63

சென்னை: பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் தளபதி 63 திரைப்படத்தில் நடித்துள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர்,யோகிபாபு,விவேக்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

thalapthy

பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு சென்னையில் பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

thalapthy

இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய மற்றொரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது  என்னவென்றால், இப்படத்தில் பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் கு.ஞானசம்பந்தன் நடித்துள்ளாராம். இதுபற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது  'விஜய் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவர். அவருடன் நடிப்பது நல்ல உணர்வைக் கொடுத்தது' என்றார். 

actor

மேலும் தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழும் இவர்,விஜய்யுடன் இணைந்து நடித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய பிக் பாஸ் பிரபலம்!

2018 TopTamilNews. All rights reserved.