ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!

 

ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நேற்று உயிரிழந்தார். முன்னாள் எம்பியான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் நவம்பர் 11ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!

இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2009 முதல் 2013 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். வெளிப்படை பேச்சு, அறிவாற்றல் மிகுந்த வழக்கறிஞர் என் பன்முகங்களை கொண்ட இவர் காங்கிரஸில் இருந்து விலகி ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!

இந்நிலையில் சென்னையில் காலமான த.மா.கா. துணை தலைவர் ஞானதேசிகன் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. இன்று மதியம் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் ஞானதேசிகன் உடல் இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!

முன்னதாக ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், தெலுங்கனா ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.