எல்லையில் பதற்றம் அதிகரித்தால் ராணுவ அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்…. பூச்சாண்டி காட்டும் சீனா

எல்லையில் பதற்றம் அதிகரித்தால் ராணுவ அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்…. பூச்சாண்டி காட்டும் சீனா

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தது முதல் இந்திய-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியா அமைதியை விரும்புகிறது ஆனால் சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழ்நிலையில் சீன அரசின் ஆதரவு பத்திரிகையான குளோபல் டைம்ஸ், எல்லையில் பதற்றம் அதிகரித்தால், பாகிஸ்தான், சீனா மற்றும் நேபாளத்தின் ராணுவ அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என பூச்சாண்டி காட்டி உள்ளது.

எல்லையில் பதற்றம் அதிகரித்தால் ராணுவ அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்…. பூச்சாண்டி காட்டும் சீனா

குளோபல் டைம்ஸ் நாளிதழில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 3 நாடுகளுடன் ஒரே சமயத்தில் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் சீனாவின் நம்பகமான மூலோபாய கூட்டாளி, நேபாளமும் சீனாவுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. சீனா முன்மொழிந்த பட்டு சாலை திட்டத்தின்கீழ் அந்த இரு நாடுகளும் முக்கிய கூட்டாளிகள்.

எல்லையில் பதற்றம் அதிகரித்தால் ராணுவ அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்…. பூச்சாண்டி காட்டும் சீனா

எல்லையில் இந்தியா பதற்றத்தை அதிகரித்தால் இரண்டு அல்லது மூன்று முனைகளிலிருந்தும் ராணுவ அழுத்தததை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இது இந்திய ராணுவ திறனுக்கு அப்பாற்பட்டது. இது இந்தியாவின் மோசமான தோல்விக்கு வழிவகுக்கும். இது போன்ற (20 இந்திய வீரர்கள் வீரமரணம்) நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். இந்தியா தற்போதை நிலவரத்தை தவறாக கணிக்க கூடாது மற்றும் சீனாவின் உறுதியான தனது பிராந்திய இறையாண்மை பாதுகாப்பை தவறாக மதிப்பிட வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.