போர் தொடங்கினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை.. மிரட்டல் விடுக்கும் சீனா

 

போர் தொடங்கினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை.. மிரட்டல் விடுக்கும் சீனா

எல்லை போர் தொடங்கினால் சீனாவை இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை அந்நாட்டு அரசு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் நேற்று இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தலையங்கம் வெளியிட்டு இருந்தது. அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ராணுவ பலம் உள்பட சீனாவின் தேசிய பலம் இநதியாவை காட்டிலும் வலுவானது என்பதை இந்திய தரப்புக்கு நினைவுப்படுத்துகிறோம். சீனா மற்றும் இந்தியா இரண்டும் பெரிய சக்திகளாக இருந்தாலும், போர் திறனின் இறுதி போட்டிக்கு வரும் போது இந்திய தரப்பு தோல்வி காணும்.

போர் தொடங்கினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை.. மிரட்டல் விடுக்கும் சீனா
குளோபல் டைம்ஸ்

எல்லை யுத்தம் தொடங்கினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை. தலைவர்களின் கூட்டத்தின் ஒரு மித்த கருத்துக்கு இரு நாடுகளுக்கும் திரும்பி வருவதற்கு பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் அதன் சரியான முயற்சியை மேற்கொள்ளும். எல்லை பிரச்சினைகளில் இந்திய மக்களின் கருத்து மிகவும் ஆழமாகவும், பரவலாகவும் சம்பந்தபட்டுள்ளது. இந்திய ராணுவம் உள்நாட்டு தேசியவாதத்தால் கடத்தப்பட்டுள்ளது.

போர் தொடங்கினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை.. மிரட்டல் விடுக்கும் சீனா
இந்திய, சீன பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு கூட்டம்

எனவே சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான எல்ல பிரச்சினையின் கூட்டு கட்டுபாட்டுக்கு மேலாக, இந்தியா பொது கருத்தையும் தேசியவாதத்தையும் நிர்வகிக்க வேண்டும். மேலும் அதன் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் சிறந்த தேர்வை எடுக்க வேண்டும். இப்போது பிரச்சினை என்னவென்றால், எல்லை பிரச்சினையில் இந்தியா ஒரு ஆக்கிரோஷமான கோட்டை வரைந்துள்ளது. எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கான சீனாவின் விருப்பத்தை ஒரு பலவீனமாக தவறாக புரிந்துகொண்டு, எந்தவிலை கொடுத்தும் எல்லை போரை நடத்துவதாக அச்சுறுத்துவதன் மூலம் சுரண்டப்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.