• April
    07
    Tuesday

Main Area

Main



இந்திய பெண்ணை மணக்கிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்

Glenn Maxwell
Glenn Maxwell

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் க்ளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வருகிறார்.  இருவரும் இணைந்த புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இருவருக்குமிடையே நடைபெற்ற நிச்சயதார்த்தத்தை உறுதி செய்யும்படியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளர் மேக்ஸ் வெல். தான் மன அழுத்தத்தில் இருந்த போது வினு தான் அதிலிருந்து என்னை மீட்க உதவியதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் மேக்ஸ்வெல் தெரிவித்திருக்கிறார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💍

A post shared by Glenn Maxwell (@gmaxi_32) on

 

இதன் மூலம் இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்யும் 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெறவுள்ளார் மேக்ஸ்வெல். முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார். 

2018 TopTamilNews. All rights reserved.