தொகுதி பங்கீடு : ஜி.கே.வாசனை அலைக்கழிக்கும் அதிமுக!

 

தொகுதி பங்கீடு : ஜி.கே.வாசனை அலைக்கழிக்கும் அதிமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொகுதிகளை பிரித்து வழங்குவதில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கும் பிரதான கட்சிகள், கூட்டணி கட்சிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிமுகவில், கூட்டணி கட்சிகள் கேட்கும் அளவுக்கு தொகுதிகள் வழங்கப்படாததால் இழுபறி நீடிக்கிறது.

தொகுதி பங்கீடு : ஜி.கே.வாசனை அலைக்கழிக்கும் அதிமுக!

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த தேமுதிக, கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டது. முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூட அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. 12 தொகுதிகளை கேட்கும் ஜி.கே.வாசனுக்கு, 5க்கும் குறைவான தொகுதிகளை மட்டுமே கொடுக்க அதிமுக முன்வருவதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு : ஜி.கே.வாசனை அலைக்கழிக்கும் அதிமுக!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதல்வரை அவரது இல்லத்திலேயே சென்று ஜி.கே.வாசன் சந்தித்தார். அவரிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது வரையிலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு இழுபறி தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.க அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே வாசன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்றும் விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்றும் தெரிவித்தார்.