12 தொகுதிகளை கேட்ட தமாகாவுக்கு 6 தொகுதிகளை கொடுத்த அதிமுக

 

12 தொகுதிகளை கேட்ட தமாகாவுக்கு 6 தொகுதிகளை கொடுத்த அதிமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 30 க்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் அதிமுக, தொகுதி ஒதுக்கீடு இறுதியாவதற்கு முன்னரே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நட்சித்திர வேட்பாளர்களான ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் கடந்த முறை போட்டியிட்ட அதே இடத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்களின் பட்டியலுடன் பாஜக, பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதையும் அதிமுக அறிவித்தது. இதனிடையே தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால் சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன.

12 தொகுதிகளை கேட்ட தமாகாவுக்கு 6 தொகுதிகளை கொடுத்த அதிமுக

இந்நிலையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகளை கேட்ட ஜி.கே.வாசனுக்கு 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக சொல்லிவிட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, திருவிக நகர், ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆறு தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிமுக வலியுறுத்தியுள்ளது.