“தேர்தல் ஆணையம், அனைவரையும் தீவிரமாக கண்காணிக்கிறது” – ஜி.கே.வாசன் பேட்டி

 

“தேர்தல் ஆணையம், அனைவரையும் தீவிரமாக கண்காணிக்கிறது” – ஜி.கே.வாசன் பேட்டி

ஈரோடு

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பினரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தமாகா சார்பில் போட்டியிடும் யுவராஜாவை ஆதிரித்து வாசன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணி வெற்றி நாளுக்கு நாள் பிரகாசமாக உள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் அதிமுக ஆட்சியாளர்களின் வளர்ச்சி திட்டங்களையும், சலுகைகளையும் மக்கள் வரவேற்று உள்ளதாக கூறினார்.

“தேர்தல் ஆணையம், அனைவரையும் தீவிரமாக கண்காணிக்கிறது” – ஜி.கே.வாசன் பேட்டி

அதிமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புவதாகவும், மாறாக திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் வாசன் தெரிவித்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை என்பது மண் குதிரையை வைத்து ஆற்றில் இறங்குவது போன்ற கதையாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய வாசன், தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிகாரிகள், தேர்தல் ஆணையம் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அதிமுக, திமுக, பாமக-வினர் என பல்வேறு தரப்பினர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதை நாம் அறிந்து கொள்ளலாம் என்றும் வாசன் தெரிவித்தார்.