தனித்து போட்டி; அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை – பாமக ஜி.கே மணி அதிரடி பேச்சு!

 

தனித்து போட்டி; அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை – பாமக ஜி.கே மணி அதிரடி பேச்சு!

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பாமக திடீர் அறிவிப்பு வெளியிட்டது. தொண்டர்களின் விருப்பப்படியும் கட்சியின் வளர்ச்சியின் காரணமாகவும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.

தனித்து போட்டி; அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை – பாமக ஜி.கே மணி அதிரடி பேச்சு!

இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவிற்கு தான் இழப்பு. கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது குறித்து வருத்தப்படவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால் எடப்பாடி பழனிசாமி குறித்து ராமதாஸ் விமர்சிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து பேச யாருக்கும் தகுதியில்லை என காட்டமாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அதிமுக பிரமுகர்களின் கருத்துக்கு பதில் அளித்து பாமக தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதிமுக தலைமை குறித்தோ, எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை குறித்தோ ராமதாஸ் தவறாக எந்த கருத்தும் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது ராமதாஸ் நல்ல மரியாதை வைத்துள்ளார். தனித்து போட்டியிடும் முடிவு குறித்து அதிமுக உடன் ஆலோசிக்கவில்லை, அதற்கு அவசியம் இல்லை. முடிவு எடுத்த பின்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடம் தகவல் தெரிவித்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.