இட ஒதுக்கீட இன்னைக்கு சொல்லிட்டீங்க… கூட்டணிய நாளைக்கு சொல்றோம்- ஜி கே மணி

 

இட ஒதுக்கீட இன்னைக்கு சொல்லிட்டீங்க… கூட்டணிய நாளைக்கு சொல்றோம்- ஜி கே மணி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா, அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.

இட ஒதுக்கீட இன்னைக்கு சொல்லிட்டீங்க… கூட்டணிய நாளைக்கு சொல்றோம்- ஜி கே மணி

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமகவினரின் கோரிக்கைகளுக்கு செவிக்கொடுத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றி. கூட்டணி குறித்து நாளை ராமதாஸ் அறிவிப்பார். 10.5% உள்ஒதுக்கீடு ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க நிபந்தனை விதித்திருந்தது. அதில், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாமக தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.