வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! முதல்வருடன் பாமக தலைவர் ஜிகே மணி சந்திப்பு

 

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! முதல்வருடன் பாமக தலைவர் ஜிகே மணி சந்திப்பு

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை 1987 முதலே பாமக கேட்டு வருகிறது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்தக் கோரிக்கை பரிசீலிக்கவில்லை. சமீபத்தில் கூட பாமக இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் அறிவித்தது.

இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது பாமகவினர் ரயில் மீது கல்வீசி போராட்டம் செய்தனர். வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக சார்பில் தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டமும் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! முதல்வருடன் பாமக தலைவர் ஜிகே மணி சந்திப்பு

இந்நிலையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாமக தலைவர் ஜிகே மணி ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

பாமக நிர்வாகிகளும் முதல்வர் இல்லத்திற்கு வந்துள்ள நிலையில் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.