திருமணமான பெண்ணுக்கு லவ் லெட்டர் தருவது குற்றம் – நீதிமன்றம் அதிரடி

 

திருமணமான பெண்ணுக்கு லவ் லெட்டர் தருவது குற்றம் – நீதிமன்றம் அதிரடி

திருமணமான பெண்களுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண தவரி என்பவடீ தனது மளிகைக் கடையில் பாத்திரம் கழுவி கொடுக்கும் பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். அடுத்த நாள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட அந்த நபர், காதல் கடிதம் கொடுத்தது பற்றி வெளியே தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

திருமணமான பெண்ணுக்கு லவ் லெட்டர் தருவது குற்றம் – நீதிமன்றம் அதிரடி

பாதிக்கப்பட்ட பெண் பொய் புகார் அளித்ததாக அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாகூர் கிளை, 45 நாட்கள் அவர் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு அவரது தண்டனைக் காலத்தை மாற்றி அமைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தை அவமானப்படுத்துவதற்கு சமம். பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ண தவரிக்கு விதிக்கப்பட்ட அபராதம் 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 85 ஆயிரம் ரூபாயை பெண்ணிற்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு அவர் திருந்துவதற்கு மறுவாய்ப்பு கொடுத்து விடுவிக்கப்படுகிறார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.