• October
    19
    Saturday

Main Area

Main



கட்சியை ஓ.பி.எஸிடம் கொடுத்துடுங்க... எடப்பாடியை கதற விடும் அமித் ஷா..!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

கடந்த வாரம் எடப்பாடி டெல்லி சென்ற போது பலமாக பாஜக மேலிடம் கவனித்தது. இதனால் புது உற்சாகத்தோடு திரும்பினார் எடப்பாடி. இப்போது ஓ.பிஎஸ் சென்றிருக்கிறார் ஓ.பி.எஸ்.  இவருக்கு அதை விட வரவேற்பாம். ஆம் இருவரையும் வைத்து செம அரசியல் கணக்கை போட்டு வைத்திருக்கிறது பாஜக. ops

ஜெயலலிதா சுட்டிகாட்டிய ஓ.பி.எஸ்க்கு தான் தமிழகத்தில் செல்வாக்கு இருக்கிறது. சசிகலா மூலம் பதவிக்கு வந்த எடப்பாடிக்கு செல்வாக்கு மக்களிடம் இல்லை. அவரே இரண்டு பேரை பக்கத்தில் வைத்து கொண்டு பணம் கொடுத்து கொண்டு பதவியில் இருக்கிறார். எனவே, வரும் தேர்தலில் ஒன்று தனித்து நிற்க வேண்டும். இல்லை என்றால் அதிமுகவை இரண்டாக பிளந்து கட்சி சின்னத்தை தேர்தலுக்குள் தாங்கள் நினைக்கும் நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைக்கிறது பாஜக. ops

அதனால் டெல்லிக்கு போன ஓ.பி.எஸ் உற்சாகமாக இருக்கிறார். இதனால் மீண்டும் எடப்பாடி டென்ஷனில் இருந்தாலும் அவருக்கு ஆட்சியை நடத்த இரண்டு வருஷம் கியாரண்டி தந்து இருக்கிறார்கள். அதுவரை கரெப்ஷன் இல்லாமல் ஆட்சியை நடத்த அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். எடப்பாடிக்கு நோஸ்கட் கொடுக்கவே டெல்லியில் நடந்த கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

 Ops

உள்ளாட்சி தேர்தலில் பிரசாரத்தை தமிழகம் முழுவதும் ஓ.பிஎஸ் முன்னெடுக்கட்டும். நீங்கள் ஆட்சியில் கவனம் செலுத்தினால் போதும்.. கட்சியை ஓ.பிஎஸிடம் விட்டுவிடுங்கள். உள்ளாட்சி தேர்தலில் அவர் தலைமையில் கூட்டணி பெரிய வெற்றி பெற்றால் அப்போது கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பதை பேசுவோம். இப்போதைக்கு இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று டெல்லி தரப்பு கறாராக கூறிவிட்டது. 

2018 TopTamilNews. All rights reserved.