• April
    05
    Sunday

Main Area

Main



டெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்பிருந்தால் இரட்டை தண்டனை உறுதி- அரவிந்த் கெஜிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 35ஆக  உயர்ந்துள்ளது.

Delhi Riots

வடகிழக்கில் ஏற்பட்ட கலவரத்திற்கு காங்கிரஸும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியினருமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் ஒருவர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஒன்று கிடைத்து உள்ளது என மத்திய மந்திரி  பிரகாஷ் ஜவடேகர் கூறி இருந்தார். இந்நிலையில் டெல்லி வன்முறையில் தொடர்புடைய நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும், கலவரத்தில் ஆம் அத்மி கட்சியினர் ஈடுபட்டிருந்தல் இரட்டை தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.