வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை! 120சவரன் பத்தலையாம்…

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை! 120சவரன் பத்தலையாம்…

மதுரை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கிராம நிர்வாக உதவியாளரான மாமனார் மற்றும் இரண்டாவது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை! 120சவரன் பத்தலையாம்…

உசிலம்பட்டி அருகே காளவாசல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகள் மாளவிகா. இவரை உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்துள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் பாண்டி என்பவரது முதல் மகன் பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தின் போது மாளவிகாவுக்காக வரதட்சணையாக 120 சவரன் தங்க நகையும், 10 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவற்றை பெண்வீட்டார் சார்பில் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணமான பத்தே மாதங்களில் பிரபாகரன் உடல்நலக் குறைவால் இறந்துவிட மாளவிகாவும் தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. வரதட்சணையாக வழங்கப்பட்ட 120 சவரன் நகையையும், 10 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்ற நினைத்த மணமகன் பிரபாகரன் வீட்டார், பிரபாகரனின் தம்பியான பிரகாஷ் என்பவரை மாளவிகாவுடன் செல்பேனில் மூலம் பேசி காதல் வலையில் விழ வைத்தார். இதனை உண்மை என நம்பிய மாளவிகா, இரண்டாவதாக தனது கணவரின் தம்பியான பிரகாஷை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சிறிது நாளிலேயே மேலும் வரதட்சணையாக பணம் நகைகளை மாளவிகாவின் பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும் படி பிரகாஷ் மற்றும் அவரது தாய் தந்தையர் கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாளவிகா கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அறித்த பெண் வீட்டார் தனது மகளின் இறப்பிற்கு நீதி வேண்டும் என செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற கோட்டாச்சியர் தலைமையிலான விசாரணையில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டு, தற்கொலைக்கு தூண்டியதாக இரண்டாவது கணவர் பிரகாஷ் அவரது தந்தை கிராம நிர்வாக உதவியாளர் பாண்டி மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்ய கோட்டாச்சியர் ராஜ்குமார் உத்தரவிட்டார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூவரை தேடி வந்த போலிசார் இன்று பிரகாஷ் மற்றும் அவரது தந்தையான கிராம நிர்வாக உதவியாளர் பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.