Home க்ரைம் பேஸ்புக்கில் காதல் ; ஏமாற்றிய காவலர் : பழிவாங்க தீக்குளித்த சிறுமி

பேஸ்புக்கில் காதல் ; ஏமாற்றிய காவலர் : பழிவாங்க தீக்குளித்த சிறுமி

காதலித்து விட்டு காவலர் ஒருவர் ஏமாற்றியதால் சிறுமி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் காதல் ; ஏமாற்றிய காவலர் : பழிவாங்க தீக்குளித்த சிறுமி

சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவருக்கு எலிசபெத் என்ற மனைவியும், கிளின்டன் என்ற மகனும் , கிரேசி(17) என்ற மகளும் உள்ளனர். கிரேசி கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்துள்ளார்.

பேஸ்புக்கில் காதல் ; ஏமாற்றிய காவலர் : பழிவாங்க தீக்குளித்த சிறுமி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கிரேசிக்கு அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் புழல் சிறையில் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்துள்ளார். நட்பு என்ற ரீதியில் ஆரம்பமான இவர்களின் பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இதனால் கிரேசி மகேஷுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளார். அத்துடன் மகேஷ் அவருடன் பாலியல் ரீதியான உறவையும் வைத்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கிரேசியிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார்.
இது குறித்து கேட்ட போதிலும் மகேஷ் சரியான பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது. கிரேசியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர, அவர்கள் அவரை கண்டித்ததுடன் அவரது செல்போனையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

பேஸ்புக்கில் காதல் ; ஏமாற்றிய காவலர் : பழிவாங்க தீக்குளித்த சிறுமி

இதனால் மனமுடைந்த கிரேசி, இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். கிரேசியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது மரணத்திற்கு காரணம் பாகிஸ்தான் மகேஷ் தான். அவர் பாலியல் ரீதியாக பழகிவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்றும் அவரை பழிவாங்கவே தீக்குளித்தேன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பேஸ்புக்கில் காதல் ; ஏமாற்றிய காவலர் : பழிவாங்க தீக்குளித்த சிறுமி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்!

மத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...

“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்!

உயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...

பெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...
- Advertisment -
TopTamilNews