• April
    07
    Tuesday

Main Area

Main



5ஆம் வகுப்பு மாணவி அமைத்த மழைநீர் சேகரிப்பு தொட்டி. நீங்க எப்போ?

Rainwater harvesting system
Rainwater harvesting system

நெல்லை, சங்கரன்கோவில் அருகே புளியங்குடி தனியார் பள்ளியில் படிக்கும் 5 வகுப்பு மாணவி ஹரிபிரியா. முருகன் - சுகுமாரி தம்பதியின் மகள் ஹரிபிரியாவுக்கு, சிறுவயதிலிருந்தே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஹரிபிரியா, ஒருகட்டத்தில் பெற்றோர் செலவுக்காக அவ்வப்போது கொடுக்கும் சிறுசிறு தொகையை சேமித்துவந்துள்ளார் உயரிய நோக்கம் ஒன்றுக்காக.

Haripriya with her RWH system

சேமிப்பில் 3,500 சேர்ந்தவுடன் விட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க அந்தப்பணத்தை பயன்படுத்தச் சொல்லி பெற்றோரை வற்புறுத்த, பெற்றோரும் மகிழ்வுடன் ஹரிபிரியாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர். ஹரிபிரியாவின் செயலை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், புளியங்குடி பக்கமாக ஒரு நிகழ்வுக்கு வந்தபோது ஹரிபிரியாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.