சிறுமி பாலியல் வன்கொடுமை – எஸ்.எஸ்.ஐ-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை – எஸ்.எஸ்.ஐ-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

தேனி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் பாவா சிக்கந்தர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வீரபாண்டி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை – எஸ்.எஸ்.ஐ-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இறுதி விசாரணை முடிந்த நிலையில், வழக்கில் பாவா சிக்கந்தர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்