• April
    05
    Sunday

Main Area

Main



ரயில் நிலையத்தில் அரங்கேறிய கொடுமை! பட்டப்பகலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்!!

Rape
Rape

மெரீனா கடற்கரை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பிறகு குழும அதிகாரிகளும் அண்ணா சதுக்கக போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று காண்காணித்த போது சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரியவந்தது. 

rape

அந்த நபரை பிடித்து விசாரித்த போது 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை அண்ணாசாலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் அன்பழகன் (25) என்றும் அவர், விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை பொது இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அன்பழகன் மீது அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.