darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



'குட்டி சரோஜா தேவி'...டிக் டோக் வீடியோவால் இளம்பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

டிக் டோக் லலிதாம்பிகை
டிக் டோக் லலிதாம்பிகை

டிக் டோக்கில் ஆண்கள் பெண்கள் என பலரும் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப நடித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். டிக் டோக்கில்  ஆபாசம் உள்ளது என்பது கூறினாலும் சிலர் உண்மையிலேயே தங்களிடம் உள்ள திறமையை உலகிற்கு வெளிப்படுத்த டிக் டோக்  ஒரு சிறந்த தளம் என்று கூறிவருகிறார்கள்.

ttn

அந்த வகையில் லலிதாம்பிகை என்ற பெண் ஒருவர் 60 மற்றும் 70 களில் வந்த பாடல்களுக்கு பழம்பெரும் நடிகைகளைப் போலவே மேக்கப், முகபாவனை செய்து கொண்டு அழகு மிளிர நடித்து அசத்துகிறார்.  நடிகை சரோஜா தேவி பாடல்களுக்கு டிக்  டோக்  செய்து வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டுள்ளார். 

ttn

இதுகுறித்து கூறியுள்ள அவர், நான் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவள்.  பரதநாட்டியத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன். என் அம்மாவுக்கு பழைய பாடல்கள்  பிடிக்கும். அதனால் என்னை அவர்  தான் டிக் டோக்  செய்ய சொன்னார்.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மேக்கப்,ஆடை என பழைய காலத்திற்கு ஏற்ற மாதிரி நடிக்க ஆரம்பித்தேன். பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. என்னை குட்டி சரோஜா தேவி, பானுமதி என்றெல்லாம் அழைக்கிறார்கள். எனக்கு படவாய்ப்புகளும் நிறைய வருகிறது. சரியானதைத் தேர்வு செய்யலாம் என்று காத்திருக்கிறேன்' என்றார். 

2018 TopTamilNews. All rights reserved.