டிக் டாக் மூலம் ரூ. 97 ஆயிரத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார்!

டிக் டாக் மூலம் ரூ. 97 ஆயிரத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார்!

மதுரை எல்லீஸ் நகர் சூர்யா குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு வயது 24. இவர் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த சுசி என்பவர் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். டிக்டாக்கில் பழகிய அந்த பெண்ணை நம்பி ராமச்சந்திரன் பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு 97000 ரூபாய் வரை பணம் அனுப்பியுள்ளார்.

டிக் டாக் மூலம் ரூ. 97 ஆயிரத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார்!

இதையடுத்து அப்பெண்ணின் டிக்டாக் மற்றும், முகநூல் பக்கம் போலியானது என்பதை தெரிந்துகொண்ட ராமச்சந்திரன் எஸ் எஸ் காலனி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

டிக் டாக் மூலம் ரூ. 97 ஆயிரத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார்!

இதை தொடர்ந்து திருப்பூர் அருகே ஆலங்காடு, வீரபாண்டி அருகில் தனது வீட்டில் பதுங்கியிருந்த இளம்பெண் சுசியை காவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடமிருந்து விலையுயர்ந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுசி அதற்கு டிக் டாக்கை ஒரு கருவியாக பயன்படுத்தி பலரிடம் இதுபோன்று மோசடி செய்துள்ளது தெரியவந்ததுள்ளது. புகார் கொடுத்த 24 மணிநேரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து மோசடி பெண்ணை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.