• December
    13
    Friday

Main Area

Main



கரடிக்கு நன்றி சொல்லி, குன்றின்மேல் ஏறி நின்றால், வென்றிடலாம் தற்கொலை எண்ணத்தை!

Girl with suicidal thoughts
Girl with suicidal thoughts

கல்லூரியில் சேர்ந்து படிக்க பெற்றோர் பணம் தராததால் கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்  தெலுங்கானாவைச் சேர்ந்த விஜயலட்சுமி. வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பதி சென்றுள்ளார். பணம் தீருமட்டும் திருப்பதியைச் சுற்றிவந்த விஜயலட்சுமி, இனி வேறு வழியில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்து திருப்பதியில் கோகர்பம் நீர்த்தேக்கம் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.

Bear attack in Tirupati

உயரமான பாறையை தேடிக்கொண்டிருந்த விஜயலட்சுமியின் காதில் திடீரென உறுமல் சத்தம். திரும்பிப் பார்த்தால் கரடி. "நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன், தயவுசெஞ்சு என்னை ஒண்ணும் பண்ணிடாதே" என கரடியிடம் தெலுங்கில் கெஞ்சியிருக்கிறார். கரடிக்கு புரியுமா கன்னிப்பெண்ணின் கதறல்? உறுமிக்கொண்டே அருகில் வந்திருக்கிறது. தற்கொலை செய்வதற்குள் இந்த கரடி கொன்றுவிடும் போலிருக்கிறதே என பயந்த விஜயலட்சுமி கீழே கிடந்த கற்களை தூக்கி கரடிமீது வீசியிருக்கிறார். சொல்லடிபட்டால் தாங்கிக்கலாம், கல்லடிபட்ட கரடி தாங்குமா? தாங்காது. கரடி நெருங்கி வந்து விஜயலட்சுமியைத் தாக்க, அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்தவர்கள் கரடியை விரட்டிவிட்டு விஜயலட்சுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கரடிக்கு நன்றி சொல்லி, குன்றின்பக்கம் அலறி  நின்றால், வென்றிடலாம் தற்கொலை எண்ணத்தை!

2018 TopTamilNews. All rights reserved.