”தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பயன்படுத்தும் புதிய மொபைல் பிரவுசர் – ஜியோ அறிமுகம்”

”தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பயன்படுத்தும் புதிய மொபைல் பிரவுசர் – ஜியோ அறிமுகம்”

தமிழ், இந்தி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் இணையதள பிரவுசிங் அனுபவத்தை அளிக்கும் வகையில், ‘ஜியோ பேஜஸ்’ எனும் மொபைல் பிரவுசரை ஜியோ நிறுவனம் தரம் உயர்த்தி அறிமுகப்படுத்தி உள்ளது.

”தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பயன்படுத்தும் புதிய மொபைல் பிரவுசர் – ஜியோ அறிமுகம்”

ஜியோ பேஜஸ் என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த இன்டர்நெட் பிரவுசர் முற்றிலும் இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டது ஆகும். இந்த தரம் உயர்த்தப்பட்ட பிரவுசர் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. குரோமியம் பிளிங்க் இன்ஜினியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் பிரவுசர், அதிகவேகமாக தகவல்களை தேடித்தருவதுடன், வலைதள பக்கங்களை விரைவாக லோட் செய்து, ஒரு சிறப்பான பிரவுசிங் அனுபவத்தை அளிக்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

”தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பயன்படுத்தும் புதிய மொபைல் பிரவுசர் – ஜியோ அறிமுகம்”

இந்த பிரவுசரை ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய 8 இந்திய மொழிகளிலும் பயன்படுத்த முடியும். மேலும், பிரவுசர் பயன்படுத்துவோரின் தகவல்களை, வாடிக்கையாளர்களே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில், பிரைவசி சிறப்பம்சங்கள் கொண்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் கூகுள் உள்ளிட்ட எந்த ஒரு தேடுபொறியையும் விருப்ப தேர்வாக செட்டிங் செய்து கொள்ளும் வசதி, டார்க் மோட் வசதி, விருப்பமான வலைதள பக்கங்களை பின் செய்து கொள்ளும் வசதி, என ஏராளமான சிறப்பு வசதிகளையும் இந்த பிரவுசர் உள்ளடக்கி உள்ளது.

”தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பயன்படுத்தும் புதிய மொபைல் பிரவுசர் – ஜியோ அறிமுகம்”

யுசி பிரவுசர் போன்ற சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜியோவின் இந்த புதிய பிரவுசர், வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஜியோ பேஜஸ் பிரவுசரை பயன்படுத்தும், 1 கோடியே 40 லட்சம் வாடிக்கையாளர்களும், இந்த புதிய அப்டேட்டுக்கு படிப்படியாக மாற்றப்படுவர் என்றும் தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்