‘கரை ஒதுங்கிய சிறுமிகளின் சடலங்கள்’ : பாலாற்றில் குளிக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

‘கரை ஒதுங்கிய சிறுமிகளின் சடலங்கள்’ : பாலாற்றில் குளிக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

பாலாற்றில் குளிக்கச் சென்று மாயமான 3 சிறுமிகளுள் 2 சிறுமிகளின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியில் வசித்து வந்த சிறுமிகள் பூர்ணிமா, சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ. காஞ்சிபுரத்தில் பெய்த தொடர் கனமழையால் ஓரிக்கை பாலாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனை பார்க்கவும், ஆற்றில் இறங்கி குளிக்கவும் சிறுமிகள் 3 பேரும் தனது உறவினர் தாமோதரன் உடன் சென்றுள்ளனர்.

‘கரை ஒதுங்கிய சிறுமிகளின் சடலங்கள்’ : பாலாற்றில் குளிக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

பின்னர், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் 3 பேரும் திடீரென மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாமோதரன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுமிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சிறுமிகள் கிடைக்காத நிலையில் இரவு நேரமும் ஆகிவிட்டதால் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டுள்ளனர்.

‘கரை ஒதுங்கிய சிறுமிகளின் சடலங்கள்’ : பாலாற்றில் குளிக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

இந்த நிலையில், இன்று காலை ஜெயஸ்ரீ மற்றும் பூர்ணிமாவின் சடலங்கள் மட்டும் கரை ஒதுங்கியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமிகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சுபஸ்ரீயை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.