இதை எல்லாம் தானம் கொடுக்கக் கூடாதாம்!

 

இதை எல்லாம் தானம் கொடுக்கக் கூடாதாம்!

தானம் செய்வது சிறந்தது என்று சொல்வார்கள். அப்படி தானம் செய்வதிலும் சில வரைமுறைகள் உள்ளன. கிழிந்த ஆடை, துடப்பம் என சில பொருட்கள் தானம் செய்யக் கூடாது என்று சொல்வார்கள். நல்லவை நம்மை வந்து சேரவே தானம் கொடுக்கிறோம்… சில பொருட்களை தானமாக கொடுத்தால் வீண் பிரச்னையை விலை கொடுத்து வாங்கியது போல் ஆகிவிடும். அப்படி தானம் கொடுக்கக் கூடாத பொருட்கள் பற்றிக் காண்போம்.

இதை எல்லாம் தானம் கொடுக்கக் கூடாதாம்!

வீட்டில் தெய்வங்கள் படத்துக்கு முன்பாக ஏற்றும் விளக்கை, எரிந்த தீபத்தை தானமாக வழங்கக் கூடாது. அப்படி தானமாகக் கொடுத்தால் நம் வீட்டில் உள்ள அதிர்ஷ்டமும் சென்றுவிடும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதே போல், வீட்டில் உள்ள கடவுள் படங்கள், சுவாமி விக்ரகங்களையும் தானமாக வழங்கக் கூடாது. அது வீட்டு வாரிசாக இருந்தாலும் சரி கொடுக்கக் கூடாது. சிலர் தங்கள் மகள்களுக்கு இப்படி வழங்குவது உண்டு. நம் வீட்டில் இருந்த லக்‌ஷ்மியை மகளின் புகுந்த வீட்டுக்கு அனுப்புவது போல் ஆகிவிடும். எனவே, தீபம், விளக்கு, வீட்டில் உள்ள விக்ரகங்களை தானம் செய்ய வேண்டாம்.

கூர்மையான பொருட்களான கத்தி, ஊசி உள்ளிட்டவற்றை தானமாக வழங்கக் கூடாது. அப்படி தானமாக வழங்கினால் நம் வீட்டில் கெட்ட சம்பவங்கள் நடக்கும்.

பழைய கிழிசலான துணியைத் தானமாக வழங்கக் கூடாது. அது துரதிஷ்டத்தை அழைக்கும். துணியைத் தானமாக வழங்க விரும்பினால் புதிய துணியாக வாங்கிக் கொடுக்க வேண்டும்.

துடைப்பத்தை தானமாகக் கொடுக்கக் கூடாது. துடைப்பம் என்பது மகாலட்சி வாசம் செய்யும் இடமாக இருக்கிறது. வீட்டில் பயன்படுத்திய துடைப்பத்தை தானமாக வழங்கினால் லக்‌ஷ்மி நம் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்.