சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள் : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள் : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

கொடைக்கானல்- பழனி நெடுஞ்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள் : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததோடு, வங்கக்கடலில் நிவர் புயலும் உருவானதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. கடந்த 25ம் தேதி புயல் கரையைக் கடந்த பிறகும் பல மாவட்டங்களில் மழை தொடருகிறது. அந்த வகையில் நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல்- பழனி நெடுஞ்சாலையில் திடீரென ராட்சத பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.

சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள் : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

அச்சமயம் வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு பாறைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரி செய்யும் பணியின் போது இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தற்போது பாறைகள் அகற்றப்பட்டாலும், மழையால் மீண்டும் பாறைகள் உருண்டு விழுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.