70 டன் எடை… ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர்… ஒரு வருட பணயதிற்குப் பிறகு கேரளா வந்த விண்வெளி ஆராய்ச்சி எந்திரம்!

70 டன் எடை… ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர்… ஒரு வருட பணயதிற்குப் பிறகு கேரளா வந்த விண்வெளி ஆராய்ச்சி எந்திரம்!

திருவனந்தபுரம் விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தின் (வி.எஸ்.எஸ்.சி) விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்காக அதிநவீன இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட கனரக லாரி இன்று கேரளாவை வந்தடைந்தது.

“நாங்கள் மகாராஷ்டிராவிலிருந்து 2019 ஜூலை 8 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினோம். நான்கு மாநிலங்களைக் கடந்த பின்னர் ஒரு வருடம் கழித்து திருவனந்தபுரத்தை அடைந்துவிட்டோம். வி.ஆர்.சி.சி.யில் இன்று சரக்குகளைஒப்படைத்து விடுவோம் என்று நம்புகிறோம்” என்று சரக்குகளுடன் வந்த ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

70 டன் எடை… ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர்… ஒரு வருட பணயதிற்குப் பிறகு கேரளா வந்த விண்வெளி ஆராய்ச்சி எந்திரம்!

ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் என நான்கு மாநிலங்கள் வழியாக பயணித்த பின்னர், 32 ஊழியர்களுடன் லாரி தற்போது திருவனந்தபுரத்தை அடைந்தது.

இந்த இயந்திரம் சுமார் 70 டன் எடை கொண்டது. 7.5 மீட்டர் உயரமும் 6.65 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த இயந்திரம் நாசிக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த இயந்திரம் விரைவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்காக தொடங்கப்படும்.