இதை செய்யாவிட்டால் வரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி தான்!

 

இதை செய்யாவிட்டால் வரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி தான்!

உள்கட்சி தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சி தான் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைமை கோரி அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தினர். இதற்கான அதிருப்தி கடிதத்தில் கையொப்பம் இட்ட 24 மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

இதை செய்யாவிட்டால் வரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி தான்!

அக்கூட்டத்தில் ராகுல் காந்தி கட்சித் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளனர் என கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதை செய்யாவிட்டால் வரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி தான்!

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க விரும்பினால் உள்கட்சி தேர்தல் தேவையில்லை. காங்கிரசை சுறுசுறுப்பாகும் வலுவாகவும் மாற்றுவதே ஒரே நோக்கம். கட்சியை வலுவானதாகவும் செயல்திறன் உடையதாகும் மாற்றவே காரிய கமிட்டி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். கட்சியின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களை இப்போது எதிர்ப்பவர்கள் கட்சி தேர்தல் நடைபெற்றால் காணாமல் போய்விடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும் . காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் நாங்கள் எழுதிய கடிதத்தை வரவேற்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.