வேளாண் மசோதாக்களை திரும்ப அனுப்புங்க…. குடியரசு தலைவரை சந்தித்து குலாம் நபி ஆசாத் வேண்டுகோள்..

 

வேளாண் மசோதாக்களை திரும்ப அனுப்புங்க…. குடியரசு தலைவரை சந்தித்து குலாம் நபி ஆசாத் வேண்டுகோள்..

காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் நேற்று குடியரசு தலைவரை சந்தித்து வேளாண் மசோதாக்களை மத்திய அரசுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஆகிய மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றியது. மேலும், மாநிலங்களை உறுப்பினர்கள் 8 பேரை இடைநீக்கம் செய்தது மற்றும் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பு செய்தனர்.

வேளாண் மசோதாக்களை திரும்ப அனுப்புங்க…. குடியரசு தலைவரை சந்தித்து குலாம் நபி ஆசாத் வேண்டுகோள்..
குலாம் நபி ஆசாத்

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது வேளாண் மசோதாக்களில் கையெழுத்திட கூடாது என்றும், அவற்றை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் குலாம் நபி ஆசாத் குடியரசு தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு தலைவரை சந்தித்த பிறகு குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இந்த இரண்டு மசோதாக்களும் அரசியலமைப்பற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து நான் அவருக்கு விளக்கமளித்தேன். மேலும் இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். இதனால் திருத்தங்கள் செய்ய முடியும்.

வேளாண் மசோதாக்களை திரும்ப அனுப்புங்க…. குடியரசு தலைவரை சந்தித்து குலாம் நபி ஆசாத் வேண்டுகோள்..
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

அந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முன் அரசு அனைத்து கட்சிகளின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். விவசாய அமைப்புகள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை செய்து இருக்க வேண்டும். இதனால் ஒருமித்த கருத்து எட்ட முடியும். ஆனால் அது அவ்வாறு இல்லை. அவர்கள் அந்த 2 மசோதாக்களை தேர்வு குழு அல்லது நிலை குழுவுக்கு அனுப்பவில்லை. இல்லையெனில் இது நல்ல மசோதாவாக இருந்து விவசாயிகளுக்கு உதவியிருக்கும். மாநிலங்களவையில் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டன, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் அரசியலமைப்பு வெட்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.