• April
    04
    Saturday

Main Area

Main



ஏலகிரி மலை பகுதியில் சுற்றித்திரியும் வெள்ளை நிற உருவம்! 

Ghost
Ghost

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சாலைகளில் இரவு நேரத்தில் வெள்ளை நிற ஆவி ஒன்று சுற்றி வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். 

ஏலகிரி மலைப்பகுதிக்கு விடுமுறை தகுதிகளை தவிர எப்போதும் பலர் சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். எனவே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2 ஆம் தேதி கோடை விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் சுற்றுலா பயணிகளை திருப்பத்தூர் பகுதியில் இறக்கி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் ஏலகிரி மலை இரண்டாவது வளைவில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெள்ளை நிறத்தில் உருவம் ஒன்று சாலையோரமிருந்த தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அந்த டிரைவர் செல்போனில் படம்பிடித்தார். அதன்பின் சிறிது நேரத்தில் அந்த உருவம் மறைந்துவிட்டது. இதனை அவரது நண்பர்களுடன் தெரிவித்து தனது செல்போனிலிருந்த வீடியோவை காட்டினார். அதற்கு அவர்களும் வெள்ளை நிற உருவம் அவ்வப்போது சாலையை கடந்து சென்றதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இதேபோல் அப்பகுதிக்கு சென்ற பல சுற்றுலா பயணிகளும் அந்த வெள்ளை நிற உருவத்தை பார்த்துள்ளனர். 

Ghost


கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று நாளான தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்கு சென்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீடு திரும்பும்போது 9வது வளைவில் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளம்பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்துக்கும் அந்த வெள்ளை நிற ஆவிதான் காரணமா என கேள்வி எழுப்பியுள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.