தைராய்டு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தூதுவேளை!

தூதுவளை… இன்றைக்கு இந்த மூலிகையின் பெருமையும் மக்களுக்கு அதிகமாகவே தெரியவந்திருக்கிறது. இதன் பல அறிந்து ஒரு திரைப்படப்பாடல் கூட வந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன்கிட்ட பேசப் போறேன் மணிக்கணக்கா…’ – என்ற அந்தப் பாடல் தூதுவளையின் பெருமையை பறைசாற்றுகிறது. குறிப்பாக தொண்டை தொடர்பான பிரச்சினைகளுக்கு தூதுவளை நல்லது என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

ரசம், துவையல்:
மழைக்காலத்தில் ஜலதோஷத்தில் தொடங்கி சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் பாடாய்ப்படுத்தும். இவற்றுக்கெல்லாம் தூதுவளை நல்ல தீர்வு தரும். வைட்டமின் சி, இரும்புச் சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகளைக் கொண்ட தூதுவளையில் துவையல் செய்து சாப்பிடலாம்.

தூதுவளை இலைகளுடன் துளசி, கற்பூரவல்லி, மிளகு, சீரகம். பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நீர் விட்டு கொதிக்கவைத்து கஷாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், பருப்பு சேர்த்துச் சமைத்து 48 நாள் சாப்பிட்டால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். இதுதவிர தூதுவளையில் ரசம், சூப், துவையல், சட்னி, குழம்பு, தோசை என விதம்விதமாக செய்து சாப்பிடலாம்.


விந்து அதிகரிக்கும்:
தூதுவளை இலையுடன், சாம்பார் வெங்காயம் சேர்த்து நல்லெண்ணை விட்டு வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதை மூன்று நாள் இடைவெளிவிட்டு மீண்டும் மூன்று நாள் என 21 நாள் சாப்பிட்டால் சுவாசக்கோளாறுகள் சரியாகும். மூச்சுவிட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு இது சிறப்பான மருந்து.

தூதுவளையின் பூக்களை நெய்யில் வதக்கி தயிர் சேர்த்துச் சாப்பிட்டால் நீர்த்துபோன விந்து கட்டிப்படும். புத்திக்கூர்மை அடையவும் இதைச் சாப்பிடலாம். தூதுவளைப் பூக்கள் மட்டுமல்லாமல் மற்றும் மொட்டுகளை பாலில் வேகவைத்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

தைராய்டு:
தூதுவளையின் காய்களை சுண்டைவற்றல்போல நன்றாக காயவைத்து வற்றலாக்கி குழம்பு செய்து சாப்பிடலாம். இதனால் வாதம், பித்தம், கபம் மற்றும் மலச்சிக்கல் சரியாகும். கசப்பு, இனிப்புச்சுவை உள்ள தூதுவளைப் பழத்தைச் சாப்பிட்டால் மார்புச்சளி, மார்பு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தூதுவளையை ஏதாவது ஒருவிதத்தில் உணவில் சேர்த்து வந்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பைவாய்ப் புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றுக்கு தூதுவளை நல்ல பலன் கொடுக்கும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தைராய்டு:
தைராய்டு கட்டிகள் வந்ததும் தூதுவளை சாப்பிட்டு வந்தால் நிரந்தரத் தீர்வு காணலாம். அதாவது, தூதுவளை இலைகளுடன் ஊற வைத்த அரிசியைச் சேர்த்து அரைத்து அடை செய்து சாப்பிடலாம். காலை உணவாக மூன்றுக்கும் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் தைராய்டு சரியாகும். முதலில் 15 நாள்களில் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நீங்கும்.

Most Popular

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “புதிய கல்விக் கொள்கை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது,...

பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது....

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!