வீக்கம், கட்டி, புரையோடிய புண்களைக் குணப்படுத்தலாம்!

வீக்கம்… மட்டுமல்ல கட்டி, புண் என அதைத்தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள் மனிதர்களைப் பாடாய்ப்படுத்திவிடும். வீக்கம்தானே, கட்டிகள்தானே என்று அலட்சியப்படுத்தினால் அது பிற்காலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே தொடக்கநிலையிலேயே அவற்றை சரி செய்தால் பேராபத்துகளிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

நன்னாரி வேர்:
மிகச் சாதாரண வீக்கத்துக்கும், கட்டிக்கும் மாசிக்காயை உரசிப் போட்டாலே போதும். ஒரேநாளில் குணமாகிவிடாது; தொடர்ந்து போட்டு வந்தால் பெரிய செலவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். நீண்டகால வீக்கங்களுக்கும், நீர் வடியும் புண்களுக்கும் நன்னாரி வேரை நீர் விட்டு களிம்புபோல் அரைத்துப் பூசலாம். நன்னாரி வேரை அரைத்து நீர் சேர்த்தோ அல்லது நீர் விட்டு கொதிக்க வைத்தோ புண்களின்மீது ஊற்றினாலும் புண் ஆறும்.

கோவை இலையை அரைத்து வீக்கம், கட்டிகளின்மீது வைத்து கட்டி வந்தால் பிரச்சினை சரியாகும். முருங்கை இலை அல்லது நொச்சி இலையை அரைத்தோ, வதக்கியோ வீக்கத்தின்மீது போட்டு வந்தால் சரியாகும். வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு பெருங்காயம் சேர்த்துக் காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால் வீக்கம் மட்டுமல்ல வாதவலியும் சரியாகும்.

மூலிகைகள்:
காட்டாமணக்கு இலைகளுடன் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வலி, வீக்கம் உள்ள இடங்களில் வைத்துக் கட்டி வந்தால் பிரச்சினைகள் சரியாகும். தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் கரைவதுடன் புண்களும் ஆறும். மூட்டு வலிக்கும் மிகச் சிறந்த மருந்து என்பதால் வலி உள்ள இடங்களில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கிய காட்டாமணக்கு இலையை ஒத்தடம் கொடுக்கலாம்.

பிரமத்தண்டு என்ற மூலிகையின் தண்டினை உடைத்தால் மஞ்சள் நிற பால் வெளிப்படும். இதை சீழ் பிடித்த ரணங்களின்மீது தடவி வந்தால் மிக எளிதில் குணமாகும். வெட்டுக்காயங்களுக்கும்கூட இதைப் பூசலாம். புளியுடன் உப்பு சேர்த்து நீர் விட்டுக் கட்டியாகக் கரைத்து சூடாக்கி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட வீக்கத்தின்மீது பற்று போட்டால் சரியாகும்.

பிரண்டை:
பிரண்டை என்ற மூலிகை பற்றி உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். பிரண்டையுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து ஒரு கரண்டியில் வைத்துச் சூடாக்க வேண்டும். இதை அடிபட்ட வீக்கம், சுளுக்கு, கட்டி உள்ள இடங்களில் பற்று போட்டால் சரியாகும். இதேபோல் எலும்பு முறிவு ஏற்பட்ட இடங்களில் பூசி வந்தாலும் சரியாகும்.

Most Popular

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் : திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ...

நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது....

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான்,...

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் . டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும்...