“தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட 104” – மருத்துவத்துறையின் முக்கிய அறிவிப்பு!!

 

“தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட 104” – மருத்துவத்துறையின் முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாத நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நீட் தேர்வை தமிழில் எழுத 19, 867 பேர் விண்ணப்பித்த நிலையில் அரசுப் பள்ளிகளில் இருந்து 11,236 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வை எதிர்கொண்டனர்.

“தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட 104” – மருத்துவத்துறையின் முக்கிய அறிவிப்பு!!

இந்த சூழலில் நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது .அத்துடன் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இருப்பினும் இன்று அறியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி என்பவர் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்படி நீட் தேர்வுக்கு 5 தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட 104” – மருத்துவத்துறையின் முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மன உளைச்சல் ஏற்பட்டால் உடனே 104 எண்ணை அழைத்து பேசவேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் வந்தால் 104 எண்ணை அழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.