நுரையீரல் கோளாறுகளை விரட்டும் கல்யாண முருங்கை!

கல்யாண முருங்கை… கொரோனா வைரஸிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பாரம்பரிய மருத்துவத்தைப் பின்பற்றுவது அதிகரித்துவருகிறது. அந்தவரிசையில் சளி, ஜலதோஷத்தை விரட்ட கல்யாண முருங்கை மூலிகையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்கள் இந்த மூலிகையை தேடிப்பிடித்து பயன்படுத்துகின்றனர்.

மூலிகை மரம்:
கொரோனா மக்கள் மத்தியில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, சித்த மருத்துவம், இயற்கை வழி மருத்துவத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. இனிவரும் காலங்களில் மூலிகைகளால்தான் நம்மைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

கல்யாண முருங்கைக்கு முள் முருங்கை, முருக்க மரம், கிஞ்சுகம் என வேறு சில பெயர்கள் உள்ளன. கல்யாண முருக்கன் என்பதே இதன் மிகச் சரியான பெயர். வேலிகளில் வளர்க்கப்படும் இந்த மரம் வெற்றிலை, மிளகு போன்ற கொடிவகைத் தாவரங்கள் பற்றிப் படர்வதற்கு ஆதாரமாக வளர்க்கப்படுகின்றன. உயிர்வேலியாகவும் வளர்க்கப்படுகிறது.


இலைச்சாறு:
சிவப்பு, வெள்ளை நிறங்களில் பூ பூக்கும் கல்யாணமுருங்கையில் வெள்ளை நிற பூ பூப்பதே சிறப்பு வாய்ந்தது. நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு மிகவும் நல்லது, கல்யாண முருங்கை. ஆஸ்துமா, இரைப்பு மற்றும் சுவாசக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் கல்யாண முருங்கை இலையின் சாற்றினை 50 மில்லி எடுத்து அதனுடன் அதே அளவு வெள்ளை வெங்காயச் சாறு கலந்து உலை கொதிக்க வைத்த நீரில் கலந்து இளஞ்சூடாக காலையில் குடித்துவந்தால் குணம் கிடைக்கும்.

மாதவிடாய்க்கோளாறு உள்ள பெண்களும் மேலே சொன்ன கலவையின்படி குடித்து வந்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அதிக ரத்தப்போக்கு, சீரற்ற மாதவிடாய், வயிறுவலி மட்டுமல்லாமல் சினைப்பை நீர்க்கட்டிகளும் சரியாகும். கல்யாண முருங்கைப்பூவுடன் மிளகு சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குழந்தையின்மைக் குறைபாடு நீங்கி மகப்பேறு உண்டாகும்.

தாய்ப்பால் சுரக்க…
கர்ப்ப காலத்தில் இந்த இலைச்சாற்றைக் குடித்தால் கரு கலைந்துவிடும் என்பதால் எச்சரிக்கை தேவை. பிரசவமான பெண்களுக்கு கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கி பாசிப்பயறு சேர்த்து வேகவைத்து கடைந்து சாப்பிடக் கொடுப்பார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்க வேண்டுமானால் கல்யாணமுருங்கை இலையை தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் பருமனாக உள்ளவர்கள் கல்யாண முருங்கை இலைச்சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியேற வேண்டுமானால் இந்த இலைச்சாற்றினை குடிக்கலாம். கல்யாண முருங்கையை சாறாக குடிக்க முடியாதவர்கள் தோசை மாவுடன் சேர்த்து தோசை சுட்டு சாப்பிடலாம்.

சுவையான வடை:
கல்யாண முருங்கையில் வடை செய்தும் சாப்பிடலாம். சாப்பிடச் சுவையாக இருக்கும் இந்த வடையை மாலைச்சிற்றுண்டியாக வைத்துக் கொள்ளலாம். வழக்கமாக வடை செய்வதற்குத் தேவையான பருப்பு உள்ளிட்ட கலவைகளுடன் பொடியாக நறுக்கிய கல்யாண முருங்கை இலையைச் சேர்த்து வடை சுட்டு சாப்பிடலாம். எல்லோரும் சாப்பிட ஏற்றது.

Most Popular

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மக்கள் ஜனநாயக கட்சி கை விடாது….. இல்டிஜா முப்தி உறுதி..

ஜம்மு அண்டு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

ராமர் கோயில் கட்டுமான பணிகள் வரும் 5ம் தேதியன்று பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்காக பல்வேறு தரப்பு மக்களும் மத வேறுபாடின்றி நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்று...

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.8,443.98 கோடியை...

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த...