சர்க்கரை நோயை விரட்டும் ஆவாரம்பூ!

 

சர்க்கரை நோயை விரட்டும் ஆவாரம்பூ!

ஆவாரம்பூ… சென்னை போன்ற இடங்களில்கூட சாலையோரங்களில் விற்கிறார்கள். ஆனாலும், ஆவாரம்பூவா… அது எங்கே கிடைக்கும்? என்று ஆச்சர்யத்துடன் கேட்கும் பலரைப்பார்க்க முடிகிறது. சர்க்கரை நோய்க்கு அருமையான மருந்தான இந்த ஆவாரம்பூவை இனியாவது தேடி வாங்கிச் சாப்பிடுவோம்.

சர்க்கரை நோயை விரட்டும் ஆவாரம்பூ!
துவையல், சட்னி:
ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ? என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு மருத்துவக் குணம் வாய்ந்தது ஆவாரை. தரிசு நிலங்களில் தானாக வளரும் இந்த மூலிகையை அதாவது ஆவாரம்பூவை துவையல், சட்னி, சாம்பார் என அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்போதும். நோய்கள் விலகிச்செல்வதுடன் வருங்காலங்களில் நோய்களும் எட்டிப்பார்க்காது.

பச்சை வாசனை போகுமளவுக்கு ஆவாரம்பூவை வதக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், தேங்காய், கடலைப்பருப்பு, உளுந்து போன்றவற்றை எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். சூடு ஆறியதும் அம்மி அல்லது மிக்சியில் அரைத்து எடுத்தால் சுவையான துவையல் ரெடி. இதை சட்னியாகவும் செய்யலாம்.

மையாக அரைத்த ஆவாரம்பூவை தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டும் சாப்பிடலாம். ஆவாரம்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாகவும், துவரம்பருப்பு சேர்த்து சாம்பாராகவும் செய்து சாப்பிடலாம். நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் செய்தும் அருந்தலாம்.

சர்க்கரை நோயை விரட்டும் ஆவாரம்பூ!தேநீர், சுவைநீர்:
அரைகிலோ ஆவாரம்பூவுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், லவங்கப்பட்டை தலா 10 கிராம் சேர்த்து அரைக்க வேண்டும். இதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் சுவையான ஆவாரம்பூ தேநீர் தயார்.

ஆவாரம்பூவில் சுவைநீர் என்ற ஒன்று தயாரித்து அருந்தலாம். ஆவாரைச் செடியின் இலை, வேர், பட்டை, பூ, விதை என அனைத்தையும் நிழலில் காய வைத்து பொடியாக்க வேண்டும். இதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து ஏலக்காய், லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்தால் சுவைநீர் ரெடி. இதனுடன் சிறிது பால் சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் பாத எரிச்சல், மதமதப்பு, தண்ணீர் தாகம், நரம்புத்தளர்ச்சி, சிறுநீரகக்கோளாறு என எல்லா பிரச்சினைகளுக்கும் இந்தச் சுவைநீர் நல்லது. உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கும் இந்தச் சுவைநீர் நல்ல ஊட்டச்சத்து பானமாகும்.

சர்க்கரை நோயை விரட்டும் ஆவாரம்பூ!
சர்க்கரை நோய் குழிப்புண்:
சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் குழிப்புண்ணுக்கு ஆவாரை இலை நல்ல மருந்து. ஆவாரை இலையை மையாக அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கி பருத்தித்துணியில் வைத்து கட்ட வேண்டும். இப்படி கட்டி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண் ஆறிவிடும்.

ஆவாரம்பட்டையுடன் கஸ்தூரி மஞ்சள், காய்ந்த மிளகாய், சாம்பிராணி சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ச்ச வேண்டும். இதை வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தேய்த்துக் குளித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் தோல் வெடிப்பு, வறட்சி, உடல் எரிச்சல் போன்றவை சரியாகும். ஆக, பல்வேறு வழிகளில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆவாரை நல்ல தீர்வளிக்கிறது.