புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் மூலிகைகள்!

புற்றுநோய்… ஆட்கொல்லி நோய்களின் வரிசையில் இதுவும் ஒன்று. எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லாதவர்களுக்கும்கூட இந்நோய் வந்து உயிரைப் பறித்து சென்றுவிடுகிறது. இந்நோய்க்கு என்னென்னவோ சிகிச்சைகள் இருந்தாலும் முற்றிய நிலையில் குணப்படுத்த முடியவில்லை. ஆனாலும், இயற்கை மருந்துகள் பலருக்கு கைகொடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேங்காய்ப்பால்:
உடலில் குறிப்பிட்ட இடத்தைப் பாதிக்கும் இந்நோய் நாளடைவில் உடல் முழுவதும் பரவுகிறது. நோய் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளித்தால் அதிலிருந்து விடுபடலாம் என்பது குணம் பெற்ற சிலரது நம்பிக்கை வாக்குமூலங்கள். ஆகவே, புற்றுநோய் வந்தால் அதற்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையின்போதே இயற்கையான சில பொருள்கள் மூலம் சிகிச்சை அளித்து குணம் பெறலாம்.

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்தோ அல்லது வெறும் தேங்காய்ப்பாலோ அருந்தலாம். பொதுவாக தேங்காய்க்கு புண்களை ஆற்றும் தன்மை இருப்பதால் புற்றுநோயாளிகளுக்கு வலு சேர்க்கிறது. இதேபோல், வெள்ளைப்பூசணிக்காயின் சதைப்பகுதியை அரைத்து ஜூஸாக்கிக் குடித்தாலும் பலன் கிடைக்கும்.

நித்திய கல்யாணி பூ:
பூசணி மற்றும் வெள்ளரியின் விதைகளைச் சாப்பிட்டும் பலர் பலன் பெற்றிருக்கிறார்கள். உடலின் வெளிப்பகுதியில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகளின்மீது வெள்ளரி விதைகளை அரைத்துப் பூசினால் அது கரைந்துவிடும். நித்திய கல்யாணிப் பூக்களின் சாறு புற்றுநோயைக் கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ செய்கிறது. இதிலுள்ள இரு ஆல்கலாய்டுகளுக்கு அத்தனை ஆற்றல் உள்ளது. மூளைப்புற்றுநோய்க்கு இது சிறப்பாக செயலாற்றுவதாகக் கூறப்படுகிறது.

புற்றுநோயாளிகளுக்கு வரும் புண் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளுக்கு புதினா நல்ல பலன் தருகிறது. கைப்பிடி புதினா இலைகளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டி அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றை சேர்க்க வேண்டும். இவற்றுடன் தேன் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தினால் புண், வயிற்றுப்போக்கு சரியாகும்.

பச்சை மஞ்சள்:
முள் சீத்தா மரத்தின் இலை மற்றும் பழங்களும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகின்றன. பழத்தை அப்படியே சாப்பிடலாம். இலைகளை நீர் விட்டுக் கொதிக்க வைத்து அருந்தலாம். சர்க்கரை நோய் இருக்கும் புற்றுநோயாளிகள் முள் சீத்தா எடுக்கும்போது சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதித்து பார்க்க வேண்டியது அவசியம்.

பச்சை மஞ்சளை அரைத்து ஜூஸாக்கிக் கொடுக்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோயை உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கக்கூடியது. நமது இந்திய பாரம்பரியத்தில் மஞ்சளை பல்வேறு வகையில் உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

கூட்டு சிகிச்சை:
திராட்சையும்கூட புற்றுநோய்க்கு எதிரானது. குறிப்பான இதன் விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் வந்தால் அதை பரவவிடாமல் தடுக்கிறது. திராட்சைப் பழத்தை சாறாகவும் அருந்துவது நல்லது.

இதுபோன்று மிக எளிமையான உணவுமுறைகளால் புற்றுநோயிலிருந்து மீளலாம். அலோபதி மருத்துவத்துடன் இணைந்த ஒரு கூட்டு மருந்து சிகிச்சையாக எடுத்துக் கொண்டால் சிறப்பான பலனை பெற்றுத்தருகிறது.

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!