ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை… டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக் கீரை வடையை செய்து ருசிப்போம்.


முளைக்கீரை:
கீரை வடை செய்ய முளைக்கீரைதான் ஏற்றது. ஒரு கட்டு முளைக்கீரையுடன் கடலைப்பருப்பு, உளுந்து தலா 100 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் ஒன்று, மிளகு ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை மற்றும் எண்ணெய், உப்பு போன்றவற்றை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் கடலைப்பருப்பு, உளுந்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் வடை மாவு பதத்தில் அரைக்க வேண்டும். அத்துடன் கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். இதையடுத்து மிளகு, சீரகம், பெருங்காயத்தைப் பொடித்து அதனுடன் ஒன்றாகக் கலக்க வேண்டும்.


வடை ரெடி:
நன்றாகக் கலந்து உப்பு சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுத்தால் அருமையான கீரை வடை ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

கடலைப்பருப்பு மற்றும் உளுந்தில் புரதச் சத்து அதிகம் உள்ளது. ஆகவே, அவ்வப்போது மாலைச் சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. மேலும் கீரையில் இரும்புச் சத்து உள்ளதால் ரத்தசோகை வராமல் தடுக்க உதவும்.

கல்யாண முருங்கை:
குழந்தைகள் மட்டுமன்றி ரத்தசோகையால் அவதிப்படும் வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் இந்தக் கீரை வடை மிகவும் நல்லது. முளைக்கீரைக்குப் பதிலாக அரைக்கீரை சேர்த்தும் வடை செய்யலாம், சுவையாக இருக்கும்.

கல்யாண முருங்கையிலும் வடை செய்யலாம். மழைக்காலத்தில் சளித்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த வடையைச் செய்து கொடுக்கலாம். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு இந்தக் கல்யாணமுருங்கைக் கீரை வடை நல்லது. நமக்கு ஏற்றவிதமாக செய்து அசத்தலாம்.

Most Popular

‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்...

’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 13 லட்சத்து  54 ஆயிரத்து 689 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 5 நாட்களுக்குள் 13 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த்...

“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...

அரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!