அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இ-பாஸ் பெறுங்கள் : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

 

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இ-பாஸ் பெறுங்கள் : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் முறை தொடரும் என அரசு அறிவித்தது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், மக்களின் நலன் கருதி அதனை தகர்க்க முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்து விட்டார். ஆனால், அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இபாஸ் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகள் அளிப்பதாக முதல்வர் அறிவித்தார். அதாவது, விண்ணப்பித்த எல்லாருக்குமே உடனடியாக பாஸ் கிடைக்கும் என்றும் ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். அதன் படி தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இபாஸ் பெற்று பயணித்து வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இ-பாஸ் பெறுங்கள் : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

இந்த நிலையில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் பழனிசாமி, அங்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், மக்களின் நலன் கருதியே இபாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இபாஸ் பெறுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.