இந்தியாவிற்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் – ஆதரவுக்கரம் நீட்டிய ஜெர்மனி!

இந்தியாவிற்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் – ஆதரவுக்கரம் நீட்டிய ஜெர்மனி!

கொரோனா தொற்றை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனுப்ப ஜெர்மனி அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்தியாவிற்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் – ஆதரவுக்கரம் நீட்டிய ஜெர்மனி!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்திற்கு மேலும், உயிரிழப்பும் 2 ஆயிரத்திற்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் இருக்கின்றன. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். அதேபோல ரெம்டெசிவிர் மருந்துகளின் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தியாவிற்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் – ஆதரவுக்கரம் நீட்டிய ஜெர்மனி!

இச்சூழல் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ உதவி செய்தவாக அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என ஜெர்மனி அறிவித்துள்ளது. இதனை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார். முதற்கட்டமாக விமானம் மூலம் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர்களை அனுப்ப முடிவு செய்திருக்கிறது ஜெர்மனி.

இந்தியாவிற்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் – ஆதரவுக்கரம் நீட்டிய ஜெர்மனி!

அதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் எனவும், விரைவில் இந்தியாவிற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் ஜெர்மனி அரசு உறுதியளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவுடனான விமானப் போக்குவரத்திற்கு ஜெர்மனி தடைவிதித்தாலும், இந்தக் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக ஜெர்மனி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.