ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு!

 

ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு!

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூடுதல் இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு 264 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவை என்ற நிலை நீடிக்கிறது. இந்தநிலையில் பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, அலாஸ்கா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு!

ஜார்ஜியாவில் 99 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவருமே 49.4 சதவிகித வாக்கு விகிதத்தோடு சமமான பலத்தில் இருக்கிறார்கள். 1200 வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் முன்னிலையில் இருந்த நிலை மாறி, தற்போது நிலைமை மாறிவிட்டது. ஜோ பைடனுக்கான ஆதரவு ஓட்டுகள் உயர்ந்து, ட்ரம்பை விட அதிகம் பெற்று முன்னேறி விட்டார்.

இந்நிலையில் ஜார்ஜியாவில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஜார்ஜியா மாகாணத்தில் வாக்குப்பதிவு நேரத்துக்குப் பின்னரும் 53 பேர் வாக்களித்ததாக ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது. இதை எதிர்த்து, ட்ரம்ப் தரப்பு அம்மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது குறிப்பிடதக்கது.